tamil nadu power cut news (தமிழ்நாடு பவர் கட் நியூஸ்): தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை (Monthly Maintenance Work) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாளை ஜூலை 10, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை புறநகர் பகுதிகள், கோவை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
நாளை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி அல்லது 05:00 மணி வரை (துணை மின் நிலையங்களுக்கு ஏற்ப நேரம் மாறுபடும்) இந்த மின்தடை அமலில் இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜூலை 10, 2026: மின்சாரம் நிறுத்தப்படும் மாவட்ட வாரியான பகுதிகளின் முழு விபரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் (Vandalur, Mudichur & Selaiyur)
ஸ்ரீராம் பிராபர்ட்டிஸ் துணை மின் நிலையத்தில் நாளை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது.
பாதிக்கப்படும் பகுதிகள்: பெருங்களத்தூர், வண்டலூர் ஏரியா, முடிச்சூர், சேலையூர், இரும்புலியூர், ஒட்டேரி, சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, லட்சுமிபுரம் ஏரியா, இராணியம்மன் கோவில் பின்புறம், விவேக் நகர் ஏரியா, அவ்வை தெரு, ஸ்ரீராம் பார்க் 63, SV நகர், TKC தெரு ஏரியா, புத்தூர், வேங்கம்பாக்கம் ஏரியா, விஷ்ணு நகர், கண்ணன் அவென்யூ 1 முதல் 5 வரையிலான பகுதிகள்.
ஈரோடு மாவட்டம் (Erode Substation Maintenance)
ஈரோட்டின் கணபதிபாளையம், நடுப்பாளையம் மற்றும் கங்காபுரம் துணை மின் நிலையங்களில் நாளை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கணபதிபாளையம் பகுதிகள்: இச்சம்பள்ளி, முத்துகவுண்டன்பாளையம், சோளங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மாடத்துப்பாளையம், கணபதிபாளையம், பாச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கேயம்பாளையம், சானார்பாளையம், குமாரபாளையம்.
நடுப்பாளையம் பகுதிகள்: நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையாம்பாளையம், கொம்பனைபுதூர், P.K.மங்கலம், கொளனல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளாம்பாரம்பூர், P.K.பாளையம், சோளங்கபாளையம், M.K.புதூர், அறப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம்.
கங்காபுரம் பகுதிகள்: பே ரோடு, குயிலாம்பாரம்பூர், கொங்கம்பாளையம், மெட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பாளையம், அத்தையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவளசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையாம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம்.
கோவை மாவட்டம் (Coimbatore & Udumalpet)
கோவை சோமையம்பாளையம், சோமனூர் மற்றும் உடுமலைப்பேட்டை பூலாங்கிணறு துணை மின் நிலையங்களில் நாளை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
சோமையம்பாளையம் & சோமனூர் பகுதிகள்: யமுனா நகர், காலப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, GCT நகர், லூனா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பார்ட், K.N.G. புதூர், வித்யா காலனி, சாய் கார்டன், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.
உடுமலைப்பேட்டை பூலாங்கிணறு பகுதிகள்
பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்கான்பாளையம், வாளவாடி, தளி, ஆர்.வல்லூர், குறிச்சிக்கோட்டை, T.M.நகர், ராகல்பாவி, மொடக்குப்பட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலம்மன்சோலை, லட்சுமிபுரம்.
நாமக்கல் மாவட்டம் (Namakkal & Kabilaramalai)
கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்சாரம் இருக்காது.
பாதிக்கப்படும் பகுதிகள்: கபிலர்மலை, சிறுகினாத்துப்பாளையம், ஐயம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிள்ளைக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கமத்தம், பாஞ்சாபாளையம், வேலூர்-செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோலிபாளையம், ஆனங்கூர், வில்லிபாளையம், எஸ்.வளவந்தி.
இதர மாவட்ட பகுதிகள் (Dindigul, Perambalur)
திண்டுக்கல் (Ayyalur & Vedasandur): அய்யலூர், குறும்பபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, நல்லமணார்க்கோட்டை, குட்டம், மினுக்கும்பட்டி சுற்றுவட்டார பகுதிகள் (காலை 09:00 முதல் மதியம் 02:00 வரை).
பெரம்பலூர் (Kaikalathur): கைக்களத்தூர், அய்யனார்ப்பாளையம், பெருநிலா, வெள்ளுவாடி, நேர்குணம், நூத்தப்பூர் சுற்றுவட்டார பகுதிகள் (காலை 09:00 முதல் மதியம் 02:00 வரை).
திருவண்ணாமலை (Elanagar, Nallur): இளநகர் டவுன் மற்றும் நல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள் (காலை 09:00 முதல் மாலை 05:00 வரை).
மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிவடைந்துவிட்டால், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் மீண்டும் வழக்கம்போல் வழங்கப்படும்.