TNEB Power Shutdown Tomorrow: சென்னை, கோவை, திருச்சி உட்பட நாளை தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் மின்தடை!

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின் தொடர் வேலைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாளை ஜூலை 23, 2026 (வியாழக்கிழமை) அன்று சென்னை, கோவை, திருச்சி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாவட்டங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாளை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 அல்லது 05:00 மணி வரை (பராமரிப்பு பணிகள் முடியும் வரை) மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சில பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாளை மின்தடை ஏற்படும் மாவட்டங்கள் மற்றும் விரிவான இடங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு விவரம்

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

(காலை 09:00 – மதியம் 02:00)

மேற்கு தாம்பரம் (CTO காலனி): சிடிஓ காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், சசி வரதன் நகர், எஃப்சிஐ நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர்.

சிட்லபாக்கம் (நேரு நகர்): வைதியலிங்கம் சாலை, சிட்லபாக்கம், ராமகிருஷ்ணா நகர் 1 முதல் 6 தெருக்கள், பாம்பன்சாமிகள் சாலையின் ஒரு பகுதி (ஐசிஐசிஐ வங்கி அருகில்), எம்எம்டிஏ நகர், சர்மா நகர், முனுவாதி தெரு, பிரதாப் அவென்யூ, ஆபிரகாம் லிங்கன் தெரு, நசீப்.

மேடவாக்கம் (சித்தலபாக்கம் SS): மாம்பாக்கம் மெயின் ரோடு (ஒரு பகுதி), பாபு நகர் பகுதி, நீலா நகர், விமலா நகர், பிரின்ஸ் கல்லூரி ரோடு, சிவகாமி நகர், நல்லதம்பி நகர், அண்ணா சாலை, நெசவாளர் நகர், பாச்சியம்மன் கோவில் தெரு, பத்மாவதி நகர்.

கௌரிவாக்கம் (ராஜகீழ்ப்பாக்கம் SS): சாந்தி நகர், சிவகாமி நகர், பழனியப்பா நகர், சாந்தாம்பாள் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, SIVT கல்லூரி.

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை பகுதி, 200 அடி ரேடியல் ரோடு, ராம் நகர் தெற்கு எக்ஸ்டென்ஷன், நாராயணபுரம், விஜிபி ராஜேஷ் நகர், கணேஷ் அவென்யூ, வி.எம் ரோடு, ஜெயின் அபார்ட்மெண்ட், ரமணியம் ஓஷன் டியூ அபார்ட்மெண்ட், சர்வம் அபார்ட்மெண்ட், பாலாஜி டென்டல் கல்லூரி பகுதி.

கோவை மற்றும் திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்

(காலை 09:00 – மாலை 04:00)

ஒக்கலிமண்டபம்: அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்.

பனப்பாளையம்: சிங்கனூர், திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு, கல்கிணறு, மாதேஷ் நகர்.

இரும்பொறை: இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பாரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனந்தசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

பீடம்பள்ளி (மெட்ரோ): கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுபாளையம் (ஒரு பகுதி), சின்ன குயிலி, நாயக்கன்பாளையம், பல்லாபாளையம்.

ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் வேலூர் சுற்றுவட்டாரம்

(காலை 09:00 – மாலை 05:00)

காரணம்பட்டு: மேல்பாடி, மிட்டூர்,வல்லிமலை, திருவலம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகள்.

திருவலம்: திருவலம், சிவானந்தா நகர், ஆர்.கே.தாங்கல், காமராஜபுரம், இளையநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தாமோட்டூர்.

சேர்க்காடு: சேர்க்காடு, மிட்டூர், கண்டிப்பேடு, முத்தரசிக்குப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்பொடிநாதம், அம்மாவார்ப்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிப்புதூர், தாதிரெட்டிப்பள்ளி.பூட்டுத்தாக்கு: மேலக்குப்பம், சாணார்பாந்தல், ஜி.சி. குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆற்காடு: உப்புப்பேட்டை, முப்பதுவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தோப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி.

கத்தியவாடி: தழனூர், ஆயிலம், ஆயிலம் புதூர், ராமநாதபுரம், கீழ்குப்பம், அருங்குன்றம், ராமாபுரம், வேப்பூர், விஷாரம்.

ராணிப்பேட்டை: நாவல்பூர், புளியங்கண்ணு, சாந்தமேடு, வி.சி. மோட்டார், பின்ஜி, எம்.பி.டி ரோடு, பைபாஸ் ரோடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்திநகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு.

திருச்சி மாவட்டம்

(காலை 09:45 – மாலை 04:00)

துவாக்குடி / வாழவந்தான்கோட்டை: அய்யம்பட்டி, தேவராநmaintainநேரி, குமரேசபுரம், எழில் நகர், திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, எம்ஜிஆர் காலனி, மேல மாங்காவனம், கணேசபுரம், என்எஸ்கே நகர், சிப்காட் நிறுவனங்கள்.

கோர்ட் கேம்பஸ் (Court Campus): புத்தூர், பீமா நகர், நீதிமன்ற பகுதி, லாசன்ஸ் ரோடு, மார்சிங் பேட்டை, செங்குளம் காலனி, வன்னாரப்பேட்டை, பாரதி நகர், வில்லியம்ஸ் ரோடு, அரசு பொது மருத்துவமனை (GH), YWCA, கமிஷனர் அலுவலகம், முத்துராஜா தெரு, நடு வைக்கோல்கார தெரு, பழைய பஜார், பட்டாபிராமன் தெரு.

அம்மாப்பேட்டை: தாயனூர் சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவாடை, அம்மாப்பேட்டை, காரியம்பட்டி, மரவனு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி நகர், சமத்துவபுரம்.

தஞ்சாவூர், நாகை மற்றும் மயிலாடுதுறை

(காலை 09:00 – மாலை 05:00 / 03:00)

தஞ்சாவூர் கிரிட்: தஞ்சாவூர் நகரம், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், சிந்தாமணி (மதியம் 3 மணி வரை).

ஆடுதுறை: ஆடுதுறை முழுப் பகுதி (மதியம் 3 மணி வரை).

கடலங்குடி & குத்தாலம்: கடலங்குடி, குத்தாலம், அரையாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

திருக்குவளை: திருக்குவளை, எட்டுக்குடி, மணலி.

திருப்பத்தூர் / கொரட்டி சுற்றுவட்டாரம்
காலை 09:00 – மாலை 05:00)

கொரட்டி & குனிச்சி: கொரட்டி, குனிச்சி, குரும்பேரி, பெரம்பட்டு, சுந்தரம்பள்ளி, சேவத்தூர், இளவம்பட்டி, மைக்காமேடு, தித்தக்குள்ளனூர், கவுண்டப்பனூர், காமாட்சிப்பட்டி, பள்ளப்பள்ளி, பெரியகரம், காசிநாயக்கன்பட்டி, லக்கினாயக்கன்பட்டி, கன்னாலப்பட்டி, புதூர்.

கடலூர் / பெரம்பலூர் / வேப்பூர் சுற்றுவட்டாரம்

(காலை 09:00 – மதியம் 02:00)

பண்ருட்டி ஊரகம்: பண்ருட்டி ரூரல், கன்றாக்கோட்டை, தட்டாம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், ராசாப்பாளையம், புதுப்பேட்டை, திருவாமூர்.

ஆதாரி: ஆதாரி, கொய்நாபாடி, மாங்குளம், கீழோரத்தூர், ஜெ.ஏ. எண்டல்.

எம். பரூர்: எம். பரூர், எருமானூர், ரெட்டிக்குப்பம், கோணன்குப்பம், எடச்சித்தூர், வளசை.

தொழுதூர்: தொழுதூர், பட்டக்குறிச்சி, லட்சுமணாபுரம், இராமநாதம், லக்கூர், இடைச்செருவாய், வேப்பூர்.

இதர மாவட்டங்கள் (காலை 10:00 – மாலை 04:00)

தேனி / கடமலைக்குண்டு

ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணன்தொழு, அறுகேவெளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

காமாட்சிபுரம்: துரைசாமிபுரம், ஆப்பிப்பட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

சேலம் / தேவூர்

(காலை 09:00 – மாலை 05:00): தேவூர், அரசிராமணி, அரியான்காடு, பேரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம், கைகாட்டிபாளையம், ஓடாசக்கரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வற்றாம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, கனியாலம்பட்டி, பள்ளக்காபாளையம்.

திண்டுக்கல் (காலை 09:00 – மதியம் 02:00): கொசவப்பட்டி, எம்மாக்கலாபுரம், ராகலாபுரம், கூவனூத்து, செம்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, தண்டிகுடி, அடலூர், வாக்கம்மபட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர்.

விழுப்புரம் / பூதமேடு

(காலை 09:00 – மாலை 04:00)

சோழகனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், அத்தனூர், பூதமேடு, ஓராத்தூர், சனிமேடு, தென்னமாதேவி, திருவாமத்தூர், ஆயன்கோவில்பட்டு, ஆயூர் அகரம், கொய்யாத்தோப்பு, பி.மேட்டுப்பாளையம், அசரங்குப்பம்.

விழுப்புரம் / மதுரப்பாக்கம்


(காலை 09:00 – மாலை 04:00)

மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்குர், விழ்வாரெட்டிபாளையம், செய்யாத்து விண்ணன், வாக்குர், சிறுவாலிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பாகண்டை, முற்றாம்பட்டு, நெற்குணம்.

பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிவடைந்தால், மின் விநியோகம் உடனடியாக சீரமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment