TNEB Power Cut: நாளை (13-07-2026) தமிழகத்தில் மின் தடை செய்யப்படும் பகுதிகளின் முழு பட்டியல்!

TNEB Power Cut Tomorrow List: தமிழ்நாட்டில் கோவை, பழனி, உடுமலைப்பேட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களின் பல பகுதிகளில் நாளை (13-07-2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. எந்தெந்த பகுதிகளில் என்னென்ன நேரங்களில் மின் தடை ஏற்படும் என்ற முழு விவரங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் மின் விநியோக கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தடையற்ற மின்சாரத்தை வழங்கவும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் அவசரகால பழுதுநீக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாளை ஜூலை 13, 2026 (திங்கட்கிழமை) அன்று
கோயம்புத்தூர்,
பழனி,
உடுமலைப்பேட்டை,
புதுக்கோட்டை,
ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கிய மின்வாரிய துணை நிலையங்களில் (Substations) மின்கம்பங்களில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் ஏபி ஸ்விட்ச் (AB Switch) உள்ளிட்ட மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

Best Inverter and Battery for Home Inverter Buying Guide Tamil
Top 5 best home inverters and batteries list for long backup in Tamil

இதையும் படிங்க – Best Inverter for Home: வீட்டிக்கு வாங்க வேண்டிய டாப் 5 சிறந்த இன்வெர்ட்டர்கள் 2026!

எனவே, நாளை காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் மற்றும் அவற்றின் நேர விபரங்களை மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களின் மின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாளை (13-07-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு பட்டியல்

Coimbatore-கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

(காலை 09:00 – மாலை 04:00 மணி வரை)

துடியலூர் துணை நிலையம்: துடியலூர், கே.வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ காலனி (NGGO Colony), பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாலியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.

புதூர் மற்றும் வி.ஜி.ஹாஸ்பிட்டல் (VG Hospital) சுற்றியுள்ள பகுதிகள். (குறிப்பு: இப்பகுதிகளில் மரக்கிளைகள் வெட்டும் பணி மற்றும் ஏபி ஸ்விட்ச் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளன).

எம்.ஜி.ரோடு துணை நிலையம்: எம்.ஜி.ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி (SIHS Colony), காவேரி நகர், ஜே.ஜே நகர் மற்றும் ஒண்டிப்புதூர்.

சாலாLayout / சாலாப்புதூர் துணை நிலையம்: மன்னம்பாளையம், வளசுப்பாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்.

TNEB digital meter bill reduction tips tamil
தமிழ்நாட்டில் வீட்டு மின் கட்டணத்தை குறைக்கும் எளிய வழிகள்

இதையும் படிங்க- வீட்டு EB பில் கிடுகிடுவென உயருதா? கரண்ட் பில்லை பாதியாக குறைக்க இந்த 5 ட்ரிக்ஸ் உடனே செய்யுங்க!

காரடிவாவி துணை நிலையம்: அப்பநாயக்கன்பட்டி, எம்.என்.சி ஃபீடர் (MNC Feeder), மில் ஃபீடர், கே.என்.புரம், காரணம்பேட்டை, புளியம்பட்டி, அப்பாரல்ஸ் (Apparels) மற்றும் அருள்குளம்.

Palani- பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகள்

(காலை 09:00 – மதியம் 02:00 மணி வரை)

பாப்பம்பட்டி துணை நிலையம்: பாப்பம்பட்டி, சிதறேவு, இரவைமங்கலம் மற்றும் ஆண்டிபட்டி.சிந்தலவாடம்பட்டி துணை நிலையம்: அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தலவாடம்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, காளிபட்டி, போடுவார்பட்டி மற்றும் சொங்கப்பட்டி.கள்ளிமந்தயம் துணை நிலையம்: கள்ளிமந்தயம், மாந்தவாடி, பொருளூர், டி.எம்.சி பாளையம் மற்றும் கே.கீரனூர்.

உடுமலைப்பேட்டை பகுதிகள்

(காலை 09:00 – மாலை 04:00 மணி வரை)

இந்திரா நகர் துணை நிலையம்: இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண் நகர், குமரமங்கலம், அந்தோணி (Thanthoni), வெங்கடாபுரம், துங்காவி, ராமகவுண்டன்புதூர், மாதராத்தி, போல்டராபட்டி மற்றும் கே.கே.புதூர்.

புதுக்கோட்டை மற்றும் வடுகபட்டி பகுதிகள்

(காலை 09:00 – மாலை 04:00 மணி வரை)

வடுகபட்டி துணை நிலையம்: வடுகபட்டி முழுவதும், மாரகபட்டி, கே.ஜி.எஸ் ஃபீடர் மற்றும் என்.சி.ஜி வளசு.

மேட்டுப்பாளையம், மங்களமேடு மற்றும் களனிவாசல் பகுதிகள்

(காலை 09:00 – மதியம் 02:00 மணி வரை)

மேட்டுப்பாளையம் & மங்களமேடு துணை நிலையங்கள்: சின்னார், எறையூர், முருக்கன்குடி, வாலிகண்டபுரம் மற்றும் சர்க்கரை ஆலை (Sugar Mill) பகுதிகள்.

களனிவாசல் துணை நிலையம்: திருமந்துறை, பெருமத்தூர், வடுகலூர் மற்றும் அத்தியூர்.

மின் நுகர்வோருக்கான முக்கிய குறிப்புகள் (Important Tips)

முன்பே திட்டமிடுங்கள்: மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் காலை 9 மணிக்கு முன்பாகவே தங்களின் குடிநீர் தேவைகள் மற்றும் மொபைல், லேப்டாப், பவர் பேங்க் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளவும்.

பராமரிப்பு பணிகள்: மின்வாரிய ஊழியர்கள் கம்பிகளில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதால், பொதுமக்கள் அந்தப் பகுதிகளில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்சார உதவி எண்கள்: மின் தடை நேரங்கள் நீட்டிக்கப்பட்டாலோ அல்லது அவசர மின் புகார்கள் ஏதேனும் இருந்தாலோ, தமிழக மின்வாரியத்தின் மாநில அளவிலான 24 மணி நேர உதவி மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிவடைந்தால், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Comment