வீட்டு EB பில் கிடுகிடுவென உயருதா? கரண்ட் பில்லை பாதியாக குறைக்க இந்த 5 ட்ரிக்ஸ் உடனே செய்யுங்க!

ஸ்மார்ட் மீட்டர் மற்றும் ரீடிங் ரகசியம்

உங்களுடையது புதிய டிஜிட்டல் அல்லது ஸ்மார்ட் மீட்டர் என்றால், அதில் மின்சார கசிவு (Current Leakage) இருந்தால் கூட ரீடிங் மிக துல்லியமாக ஓடும். பழைய ஒயரிங் உள்ள வீடுகளில் சுவர்களில் எர்த் ஆனால் பில் எகிறும்.

எப்படி செக் செய்வது?

உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சுவிட்சுகளையும் (ஏசி, ஃபிரிட்ஜ் உட்பட எல்லாவற்றையும்) ஆஃப் செய்துவிட்டு மெயின் போர்டில் உள்ள மீட்டரைப் பாருங்கள். அப்போதும் மீட்டரில் உள்ள சிவப்பு விளக்கு வேகமாக மின்னினால் அல்லது ரீடிங் மாறினால், உங்கள் வீட்டு ஒயரிங்கில் மின் கசிவு உள்ளது என்று அர்த்தம். உடனே ஒரு எலக்ட்ரீஷியனை வைத்து சரிசெய்வது பில்லை பாதியாக குறைக்கும்.

ஃபிரிட்ஜ் (Refrigerator) வைக்கும் இடத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?

வீட்டில் 24 மணி நேரமும் ஓடும் ஒரே சாதனம் ஃபிரிட்ஜ் மட்டும்தான். இதனால் வீட்டின் மொத்த இபி பில்லில் 15% முதல் 20% வரை ஃபிரிட்ஜ் மூலமே உறிஞ்சப்படுகிறது.

செய்ய வேண்டிய மாற்றங்கள்

ஃபிரிட்ஜை சுவரோடு ஒட்டி வைக்கக் கூடாது. சுவற்றுக்கும் ஃபிரிட்ஜின் பின்புறத்திற்கும் இடையே குறைந்தது 6 அங்குல இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் கம்ப்ரஸர் சூடாகாமல் காற்றோட்டமாக இருக்கும். சூடானால் கம்ப்ரஸர் அதிக நேரம் ஓடி கரண்ட் பில்லை எகிற வைக்கும்.

ஃபிரிட்ஜின் உட்புற வெப்பநிலையை எப்போதுமே மீடியம் (Medium) அல்லது நார்மல் மோடில் வையுங்கள். அளவுக்கு அதிகமாக கூலிங் வைத்தால் மின் நுகர்வு இரட்டிப்பாகும்.

பழைய சீலிங் ஃபேன்களை மாற்றுங்கள்

நம்மில் பலர் ஏசி பில்லை பற்றி கவலைப்படுகிறோம், ஆனால் வீட்டில் 3 அல்லது 4 ஃபேன்கள் நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருப்பதை கவனிப்பதில்லை. ஒரு பழைய சாதாரண சீலிங் ஃபேன் 75W முதல் 80W வரை மின்சாரத்தை எடுக்கும்.

ஸ்மார்ட் தீர்வு

உங்கள் வீட்டில் 5 வருடங்களுக்கும் பழைய ஃபேன் இருந்தால், அதை மாற்றிவிட்டு BLDC (Brushless DC) ஃபேன்களைப் பயன்படுத்துங்கள். இந்த பிஎல்டிசி ஃபேன்கள் வெறும் 28W முதல் 35W மின்சாரத்தில் மட்டுமே இயங்கும்.

ஒரு ஃபேனை மாற்றினால் கூட மாதம் உங்களுக்கு 30 முதல் 40 யூனிட்டுகள் வரை மிச்சமாகும். இது உங்களை அடுத்த இபி பில் ஸ்லாப்பிற்கு (Slab Rate) போகாமல் தடுத்து பணத்தை மிச்சப்படுத்தும்.

பாண்டம் லோட் (Phantom Load) தெரியாமல் கரண்ட் உறிஞ்சும் சுவிட்சுகள்

டிவி, செட்-டாப் பாக்ஸ், கம்ப்யூட்டர், மற்றும் மொபைல் சார்ஜர்களை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்துவிட்டு, சுவரில் உள்ள மெயின் சுவிட்சை ஆஃப் செய்யாமல் விடுவதற்கு பெயர்தான் பாண்டம் லோட்.

அறிவியல் உண்மை


சாதனங்கள் ஸ்டேண்ட்பை (Standby Mode) மோடில் இருக்கும் போது, அதன் உள்ளே இருக்கும் சென்சார்கள் மற்றும் எல்இடி விளக்குகள் தொடர்ந்து மின்சாரத்தை உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.இப்படி வீட்டின் அனைத்து சுவிட்சுகளையும் ஆஃப் செய்யாமல் விடுவதால் மட்டுமே மாதம் 5% முதல் 8% வரை தேவையற்ற மின் கட்டணம் எக்ஸ்ட்ராவாக வருகிறது. எனவே பயன்பாடு முடிந்ததும் மெயின் சுவிட்சை ஆஃப் செய்வதை பழக்கமாக்குங்கள்.

வாட்டர் ஹீட்டர் மற்றும் அயர்ன் பாக்ஸ் பயன்பாடு

அதிக வாட்ஸ் (Watts) கொண்ட சாதனங்களை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் ஸ்மார்ட்னஸ் இருக்கிறது.

வாட்டர் ஹீட்டரை குளிக்கச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஆன் செய்துவிட்டு, தண்ணீர் சூடானதும் ஆஃப் செய்துவிடுங்கள். பல மணி நேரம் ஆன் செய்து வைத்தால் ஆட்டோ-கட் ஆஃப் மூலமாக மீண்டும் மீண்டும் ஆன் ஆகி அதிக யூனிட்டுகளை எடுக்கும்.

அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தும் போது துணிகளை மொத்தமாக சேர்த்து வைத்து ஒரே நேரத்தில் அயர்ன் செய்யுங்கள். தினமும் ஒரு துணியை அயர்ன் செய்யும்போது காயில் சூடாவதற்கே அதிக மின்சாரம் வீணாகும்

மின்சாரத்தை சேமிப்பது என்பது நமது பணத்தை சேமிப்பது மட்டுமல்ல, நாட்டின் வளத்தை காப்பதும் ஆகும். மேலே சொன்ன இந்த 5 எளிய தொழில்நுட்ப மாற்றங்களை உங்கள் வீட்டில் உடனே செய்து பாருங்கள். அடுத்த இரண்டு மாதங்களில் வரும் உங்கள் இபி கார்டில் நிச்சயம் மாற்றம் தெரியும்!

Leave a Comment