நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (Tamil Nadu Power Cut Areas – 18 July 2026): தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் துணை மின் நிலைய புனரமைப்பு வேலைகள் காரணமாக நாளை ஜூலை 18, 2026 (சனிக்கிழமை) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி அல்லது மாலை 5:00 மணி வரை அந்தந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் சீக்கிரம் முடிந்தால் மின்சாரம் முன்னதாகவே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் நாளை மின்சாரம் இருக்குமா இல்லையா என்பதை கீழே உள்ள மாவட்ட வாரியான லிஸ்ட்டை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
கோவை மாவட்டம் (Coimbatore & Mettupalayam)
கோவை மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பிரேக்கர்கள் மற்றும் துணை மின் நிலைய புனரமைப்பு வேலைகள் காரணமாக காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
மேட்டுப்பாளையம் பகுதி: மேட்டுப்பாளையம் டவுன், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்.
அன்னூர் பகுதி: அன்னூர் டவுன், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்கபாளையம், சொக்கம்பாளையம்.
பாசூர் பகுதி: பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுகாடு புதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.
நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி (Nagapattinam Area)
நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் தடைபடும்.
நாகை அர்பன் பகுதி: நாகப்பட்டினம் டவுன், வாங்காரமாவடி, வாழ்மங்கலம், நாகூர்.
நாகப்பட்டினம் பகுதி: நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை.வேளாங்கண்ணி பகுதி: வேளாங்கண்ணி திருத்தலம் மற்றும் அதன் சுற்றுவட்டார முழு பகுதிகள்.
வேட்டைக்காரனிருப்பு பகுதி: வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி.
கீழ்வேளூர் பகுதி: கீழ்வேளூர், ஆலியூர்.பொறையாறு பகுதி: பொறையாறு, தரங்கம்பாடி.
கிடாரங்கொண்டான் பகுதி: கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில்.
திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை (Tirupattur District)
திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு சப்ஸ்டேஷன் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும்.
விண்ணமங்கலம் பகுதி: விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிகுப்பம், வீரன்குப்பம், குமரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கள்துர்க்கம், மேல்சானாங்குப்பம், மலையாம்பட்டு, தேன்நம்பட்டு, மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம், கிரிசமுத்திரம்.
உதயேந்திரம் பகுதி: உதயேந்திரம், மேல்குப்பம், ஜாஃபராபாத், கொல்லாகுப்பம், மாதனச்சேரி, இளையநகரம், எச்சம்பட்டு.
நாட்றாம்பள்ளி பகுதி: நாட்றாம்பள்ளி டவுன், பச்சூர், திம்மம்பேட்டை, கொத்தூர், கத்தாரி, புதுப்பேட்டை.
பச்சூர் பகுதி: பச்சூர், கொத்தூர் ஃபாரஸ்ட், காந்திநகர், கே.பண்டாரப்பள்ளி.
ஜோலார்பேட்டை பகுதி: ஜோலார்பேட்டை டவுன், ரெட்டியூர், சக்கரகுப்பம், குடியானகுப்பம், ரயில்வே காலனி பகுதிகள்.
திருப்பத்தூர் டவுன்: திருப்பத்தூர், கேஷ்ராம், ஹவுசிங் போர்டு, மாதவலம், குரிசிலாப்பட்டு, பொம்மிகுப்பம், கோட்டை பகுதி.
குரிசிலாப்பட்டு பகுதி: குரிசிலாப்பட்டு, மூலக்காடு, சின்னசமுத்திரம், அந்தியப்பனூர், கரும்பூர்.
விழுப்புரம் மற்றும் திண்டிவனம் (Villupuram & Tindivanam)
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் சப்ஸ்டேஷன் வேலைகள் காரணமாக காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
விழுப்புரம் கிரிட் பகுதி: விழுப்புரம் டவுன், சென்னை என்.எச் ரோடு, திருச்சி என்.எச் ரோடு, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்.நகர், நன்னாடு, பாப்பங்குளம், திருவமாத்தூர், ஓம் சக்தி நகர், கப்பூர், மரகதபுரம்.
சொர்ணாவூர் பகுதி: ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, பூவரசன்குப்பம், பட்டரைப்பாதி, ஏ.ஆர்.பாளையம், காலிங்கிக்குப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம்.
திண்டிவனம் பகுதி: திண்டிவனம் டவுன், கிளியனூர், உப்புவேலூர், சாரம், ஊரல், கொள்ளார், சிப்காட் திண்டிவனம், சந்தைமேடு, ஐயன்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், ஹாஸ்பிட்டல் ரோடு, கிடங்கல், மைலம்.
சிட்டம்பூண்டி பகுதி: சிட்டம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளிப்பட்டு, மீனம்பட்டு, கோனை, சோமசமுத்திரம், சேரனூர், துதிப்பட்டு, பொன்னாகுப்பம், தச்சம்பட்டு, காரை, மோடையூர், திருவம்பட்டு, அனிலாடி, கீழ் மற்றும் மேல் பகுதிகள்.
ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் (Ranipet Areas)
ராணிப்பேட்டை, அரக்கோணம் மற்றும் வாலாஜா சுற்றுவட்டார பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
வடுகந்தாங்கல் & மேல்படி: கே.வி குப்பம், பி.கே.குப்பம், லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமடங்கி, வடுகந்தாங்கல், மேல்படி,வள்ளிமலை, எருகம்பட்டு, வேப்பலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீழாகுப்பம், கொட்டநத்தம்.
கீரைசாத்து பகுதி: பொன்னாய்புதூர், கீரைசாத்து, எஸ்.என் பாளையம், கே.என் பாளையம், அதிங்கவூர், பரமசாத்து, தேங்கல், கே.ஆர் பள்ளி, ராமாபுரம், குமணந்தாங்கல், குமரகுண்டா, பெருமாள்குப்பம், வசூர்.
மேல்வெங்கடாபுரம் & முகுந்தராயபுரம்: கோடைகல், ரினான்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், சூரை, நெல்லிக்குப்பம், லாலாபேட்டை, கல்மேல்குப்பம், தகன்பாளையம்.
மாம்பாக்கம் & சிப்காட்: வாழப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கநாவரன், ராணிப்பேட்டை டவுன், பெல் (BHEL), அக்ரஹாரம், வானம்பாடி, தண்டலம், செட்டித்தாங்கல் மற்றும் சிப்காட் சுற்றுவட்டார பகுதிகள்.
காவேரிப்பாக்கம் & வாலாஜா: ஆலப்பாக்கம், முசிரி, பகவெளி, சக்ரமல்லூர், வேகமங்கலம், கலவை, வாலாஜா டவுன், ஒழுகூர், தர்மநீதி, வன்னியவேடு, கடப்பந்தாங்கல்.
ஒழுகூர் & முசிரி: ஒழுகூர், கரடிகுப்பம், தாலங்கை, ஜி.சி.குப்பம், வாங்கூர், வள்ளுவம்பாக்கம், பாடியம்பாக்கம், செங்காடு மூட்டூர், முசிரி, பகவாலி, குப்பதாமொட்டூர்.
அரக்கோணம் வின்டர்பேட்: வின்டர்பேட், எஸ்.ஆர். கேட், பெருமூச்சி, வெங்கடேசாபுரம், அம்மனூர், தேவதானம், நாவல், ரயில்வே காலனி, ராம்கோ, பொய்பாக்கம்.
அரக்கோணம் RAPDRP டவுன்: அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, ஹவுசிங் போர்டு, காலிவாரிகண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர்.
திண்டுக்கல் மாவட்ட பகுதிகள் (Dindigul West & Natham)
வேடசந்தூர் மற்றும் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை சப்ஸ்டேஷன் பராமரிப்பு பணி காரணமாக காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின்சாரம் தடைபடும்.
வலையப்பட்டி பகுதி: லிங்கவாடி, வேம்பாரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்.அங்குநகர் பகுதி: திண்டுக்கல் டவுன், கலெக்டரேட் வளாகம், செந்நமநாயக்கன்பட்டி, ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம், பூதிபுரம், ராஜாக்கள்பட்டி, அங்குநகர், நந்தவனப்பட்டி, ஜி.டி.என் கல்லூரி, ஆர்.வி.எஸ் கல்லூரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கடலூர் மாவட்டம் (Cuddalore – Kurinjipady)
குறிஞ்சிப்பாடி பகுதி: குறிஞ்சிப்பாடி டவுன், மீனாட்சிப்பேட்டை, குண்டியமல்லூர், சேரகுப்பம், கொல்லக்குடி, ஆர்.என் புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் நாளை காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின்சாரம் இருக்காது.
புதுக்கோட்டை மாவட்டம் (Pudukkottai Area)
டி.நல்லூர் & திருமயம்: டி.நல்லூர் சப்ஸ்டேஷன் மற்றும் திருமயம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டுமொத்த முழு பகுதிகளிலும் நாளை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்.