தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கு தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை வழங்குவதற்காக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் (Monthly Maintenance Works) மற்றும் ரிலே சோதனைகள் (Relay Testing) தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை ஜூன் 30, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில், என்னென்ன பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது என்ற முழு விபரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் (காலை 09:00 – மதியம் 02:00 / மாலை 05:00 வரை)
அண்ணா நகர், ஷெனாய் நகர், அமஞ்சிக்கரை (மதியம் 2 மணி வரை):அண்ணா நகர் A முதல் W பிளாக் வரை, வோக் நகர் (VOC Nagar), ஷெனாய் நகர், அமஞ்சிக்கரை, ஆர்.வி.நகர், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம் கார்டன் ரோடு பகுதிகள், பெரிய கூடல் AA முதல் AM பிளாக் வரை, திருவீதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரிலே சோதனை மற்றும் பொது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது.
குரோம்பேட்டை / காடப்பேரி (மதியம் 2 மணி வரை):நாகல்கேனி, குரோம்பேட்டை, சங்கம் ரோடு, திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கநாதசாமி 1வது மற்றும் 2வது தெரு, பாடசாலை, வெங்கட்ராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, வேலப்பர் தெரு, நல்லத்துரா ஆகிய பகுதிகள்.
ஈஞ்சம்பாக்கம் (மாலை 5 மணி வரை):ஈஞ்சம்பாக்கம் 33KV துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக, 1வது அவென்யூ வெட்டுவாங்கேணி, அக்கரை கிராமம், அல்லிகுளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்தி வேதாந்த சாமி ரோடு ஆகிய பகுதிகளில் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்
திண்டுக்கல் மாவட்டம் (காலை 09:00 – மதியம் 02:00 வரை)
வேடசந்தூர் தாலுகா (ரெங்கநாதபுரம் பகுதி): கோலார்பட்டி, தேவநாயக்கன்பட்டி, காலவர்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம்.
திண்டுக்கல் மேற்கு தாலுகா (கீழக்கோட்டை பகுதி): காந்தி கிராமம், சின்னாளப்பட்டி, சிறுமலை, சாமியார்ப்பட்டி, அம்பாத்துரை, பச்சைமலையான்கோட்டை.
திண்டுக்கல் கிழக்கு தாலுகா: திண்டுக்கல் டவுன் (Dindigul Town), சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம்.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் எல்லை பகுதிகள்நெகமம் பகுதி (காலை 09:00 – மாலை 04:00 வரை)
காட்டாம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்
அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகள் (காலை 09:00 – மதியம் 02:00 வரை)
ஆண்டிமடம் பகுதி: வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல்.பாப்பாகுடி பகுதி: இரவாங்குடி, நல்லூர், கடுவெட்டி, மேலநிகுலி, பவர்கிரிட் பகுதிகள்.பெரியகருக்கை பகுதி: பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம்.அய்யூர் பகுதி: கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், அய்யூர்.
உஞ்சனை பகுதி (மாலை 05:00 வரை): உஞ்சனை 230 கேவி துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் உஞ்சனை சுற்றுவட்டார பகுதிகள்.
விழுப்புரம் / சொர்ணாவூர் பகுதிகள் (காலை 09:00 – மாலை 04:00 வரை)
ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசூரெட்டிபாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, பூவரசன்குப்பம், பட்டரைப்பாதி, ஏ.ஆர்.பாளையம், காளிங்கிகுப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நாளை மதியம் அல்லது மாலைக்குள் திட்டமிட்டபடி முடிவடைந்தவுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழக்கம்போல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் அவசிய தேவைகளை முன்னரே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.